காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே மர்மப் பொருள் வெடித்த இடத்தில் மேலும் ஒரு வெடிபொருள் சிக்கியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அடுத்த மானாமதி ஊராட்சியில் கங்கை அம்மன் கோயில் குளம் ஒன்று உள்ளது. அந்த குளத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று விடுமுறை என்பதனால் அந்த ஊராட்சி சார்ந்த ஐந்து இளைஞர்கள் கோயில் குளத்துக்குள் சென்றிருக்கிறார்கள். அப்போது நகைப்பெட்டி மாதிரியான அளவில் ஒரு பெட்டி ஒன்று கிடைத்துள்ளது. அதனை கையில் எடுத்து பார்த்தபோது அந்த மர்மப் பொருள் வெடித்து சிதறியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வெடித்த பொருளின் தன்மை குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், திருப்போரூர் அருகே மர்மப் பொருள் வெடித்த இடத்தில் மேலும் ஒரு வெடிபொருள் சிக்கியுள்ளது. மானாம்பதியிலுள்ள குளத்தின் கரையின் கண்டெடுக்கப்பட்ட வெடிபொருளை கைப்பற்றி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் குளக்கரையில் மேலும் இதுபோன்ற வெடிபொருள் இருக்கின்றனவா என்பது குறித்தும் போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
Loading More post
சாலமன் பாப்பையா உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்
மறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு
சசிகலா நாளை மறுநாள் விடுதலையாகிறார்: டிடிவி தினகரன்
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
கொரோனா பரவல் அச்சம்: குடியரசுதின கிராம சபைக் கூட்டம் ரத்து
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்