ரஜினிகாந்தின் ’2.0’ படம் சீனாவில் அடுத்த மாதம் 6 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்ஷய்குமார் உட்பட பலர் நடித்த படம், ‘2.ஓ’. லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரித்த இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். கடந்த வருடம் நவம்பர் மாதம் ரிலீஸ் ஆன இந்த படம் உலகம் முழுவதும் 10,500 ஸ்கிரீன்களில் வெளியாகி சாதனை படைத்தது. வேறு எந்த இந்திய படமும் இத்தனை ஸ்கிரீன்களில் வெளியானதில்லை. ’பாகுபலி 2’ 9000 ஸ்கிரீன்களில் வெளியாகி இருந்தது.
இந்நிலையில், இந்தப் படம் சீனா உட்பட பல்வேறு மொழிகளில் வெளியாக இருப்பதாக ஏற்கனவே கூறப்பட்டிருந்தது. அதற் கான மொழி மாற்றப்பணிகள் நடந்துவந்தன. இந்நிலையில் சீன மொழியில் ஜூலை 12 ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக இருந்தது. பின்னர் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் இதன் ரிலீஸ் தேதி செப்டம்பர் 6 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதன் போஸ்டரை நடிகை எமி ஜாக்சன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Loading More post
டாப் 5 தேர்தல் செய்திகள்: ஆட்சி கருத்துக்கணிப்பு முதல் கட்சி கூட்டணி முடிவுகள் வரை
மகளிர் தினத்தன்று பெண் தொழில்முனைவோரிடம் பொருட்கள் வாங்கிய பிரதமர் மோடி
தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: பழனிசாமி வாக்குறுதி
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை