“தனி மயானத்தை அரசே அமைப்பது சாதியை ஊக்குவிப்பது ஆகாதா?” - நீதிமன்றம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பட்டியலினத்தவர்களுக்கு தனி மயானத்தை அரசே அமைத்து கொடுத்தது தொடர்பாக அதிருப்தி தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், இதன்மூலம் சாதிப் பிரிவினையை அரசே ஊக்குவிப்பது போல் உள்ளதாக தெரிவித்துள்ளது.


Advertisement

வேலூர் மாவட்டம் நாராயணபுரத்தைச் சேர்ந்த குப்பன் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன் விபத்தில் இறந்தார். இவரது உடலை, விவசாய நிலம் வழியாக எடுத்துச் செல்ல எதிர்ப்பு தெரிவித்ததால் வேறு வழியின்றி, அருகில் உள்ள பாலத்தில் இருந்து கயிற்றால் இறக்கி அதன் பின்னர் அங்கிருந்து இவர்கள் சுடுகாட்டிற்கு கொண்டு சென்றனர். இறந்த பிறகும் தொடரும் இந்த அவலம் பற்றி, கிராம மக்கள், மாவட்ட ஆட்சியருக்கும், முதல்வரின் தனி பிரிவிற்கும் தெரிவித்தனர்.


Advertisement

இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த உயர்நீதிமன்ற நீதிபதிகள்,  ஆகஸ்ட் 26-ல் பதிலளிக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சம்பவம் நடந்த நாராயணபுரம் கிராமத்தில் இருக்கும் பட்டியலினத்தவர்களுக்கு,  தனி மயானம் அமைத்துள்ளதாக தாசில்தாரின் பதில் மனு அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், தமிழகத்தில் பட்டியலினத்தவர்களுக்கென தனி மருத்துவமனைகளோ, அரசு அலுவலகங்களோ, காவல் நிலையங்களோ இல்லாத நிலையில் அவர்களுக்கு தனி மயானத்தை அரசே அமைத்து கொடுப்பது சாதி பிரிவினையை  ஊக்குவிப்பது போல் உள்ளதாக தெரிவித்தனர். தெருக்களில் இருந்த சாதி பெயர்களை நீக்க வேண்டும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி பெயர்களில் 'ஆதிதிராவிடர் நலப்பள்ளி' போன்ற பெயர்களை நீக்காதது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.


Advertisement

மேலும், குப்பன் உடலை பாலத்தில் இருந்து கயிறு கட்டி இறக்கிய சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆகஸ்ட் 28 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர் மற்றும் தாசில்தருக்கு உத்தரவிட்டனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement