தன்னை மீண்டும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமித்ததற்காக ரவிசாஸ்திரி தன்னுடைய தலைமையில் ஒரு பெரிய கோப்பையையாவது வென்று காட்ட வேண்டும் என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இவர் 2021ம் ஆண்டு வரை பயிற்சியாளராக நீடிப்பார். விராட் கோலி - ரவிசாஸ்திரி இணைந்து பல முக்கியமான போட்டிகள் மற்றும் தொடர்களை வென்றுள்ளார்கள். ஆனால், ஒரு ஐசிசி கோப்பையை கூட இந்த இணை வெல்லவில்லை. அதனால், ரவி சாஸ்திரி மீண்டும் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட போது சில விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், ரவிசாஸ்திரி மீண்டும் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து சவுரவ் கங்குலி தன்னுடைய கருத்துக்களை தெரிவித்துள்ளார். இந்தியா டுடேவுக்கு அவர் அளித்த பேட்டியில், “ரவி சாஸ்திரி நியமனம் சரியானதுதான். இந்திய அணி ஏற்கனவே வலுவாகதான் இருந்தது. இப்போது அப்படிதான் இருக்கிறது. அதனால், மீண்டும் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமித்ததற்காக ரவிசாஸ்திரி தன்னுடைய தலைமையில் ஒரு பெரிய கோப்பையையாவது வென்று காட்ட வேண்டும்.
திறமையான வீரர்களுக்கு பற்றாக்குறை இல்லை. விராட் கோலி, ரோகித் சர்மா, ஹர்திக் பாண்ட்யா, குல்தீப், ரிஷப் பண்ட் மற்றும் ஷிகர் தவான் உள்ளிட்டோர் இருக்கிறார்கள். 2015 உலகக் கோப்பை அரையிறுதி, 2016 டி20 உலகக் கோப்பை தற்போது 2019 உலகக் கோப்பை ஆகியவற்றில் தோல்வி அடைந்துள்ளோம். நாக் அவுட் போட்டிகளில் வெல்வதற்கான வழிகளை அவர் கண்டறிய வேண்டும். அதுதான் சரிசெய்யப்பட வேண்டிய பிரச்னை” எனக் கூறியுள்ளார்.
Loading More post
சென்னையில் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக இதுவரை 24 வழக்குகள் பதிவு
ஐபிஎல் 2021 அட்டவணை வெளியீடு: முதல் போட்டியில் மும்பை-பெங்களூரு அணிகள் மோதல்
பரீட்சையில் திரைப்பட பாடல் எழுதியதால் கிண்டல், வெளியேற்றம்: மாணவர் எடுத்த சோக முடிவு
அதிமுக - பாஜக கூட்டணி தமிழகத்தில் ஆட்சியமைக்கும்: அமித் ஷா நம்பிக்கை
தொகுதிப் பங்கீடு: அதிமுக - தமாகா இன்று 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!