ஐபிஎல் 2020: பஞ்சாப் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படுகிறாரா அஸ்வின்?

R-Ashwin-likely-to-be-replaced-as-KXIP-captain

ஐபில் தொடரில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து அஸ்வின் நீக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Advertisement

ஐபிஎல் தொடரில், கடந்த இரண்டு வருடங்களாக, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வருகிறார் அஸ்வின். ஐபிஎல் தொடரில் மொத்தம் 139 போட்டிகளில் விளையாடி 125 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அஸ்வின், கேப்டனாக 28 போட்டிகளில் விளையாடி 25 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.


Advertisement

கடந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணி லீக் சுற்றோடு வெளியேறியது. அதோடு புதிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரோடு களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சிறப்பாக ஆடியது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் புதிய கேப்டனாக ஸ்மித்தை நியமித்துள்ளது.

இதையடுத்து பஞ்சாப் அணிக்கும் புதிய கேப்டனை நியமிக்க அந்த நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அஸ்வினுக்குப் பதிலாக கே.எல்.ராகுல் புதிய கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement