ஆம்புலன்ஸில் மது கடத்தும் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
கிரேட்டர் நொய்டா பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது சைரன் ஒலித்தபடி ஆம்புலன்ஸ் ஒன்று வேகமாக வந்துகொண்டிருந்தது. போலீசார் அதற்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றனர். அப்போது தற்செயலாக ஆம்புலன்சின் உள்ளே போலீசார் பார்த்தனர். உள்ளே பேஷன்ட் யாருமில்லாமல் அட்டைப் பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸ் அதிகாரி திலீப் சிங் என்பவர் சந்தேகத்தின் பேரில் ஆம்புலன்சை நிறுத்தி சோதனை செய்தார். உள்ளே 40 அட்டைப்பெட்டிகளில் விதவிதமான மது வகைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
இதையடுத்து மனோஜ், முரளி என்ற 2 பேரை பிடித்து விசாரித்தனர். கடந்த சில மாதங்களாக ஆம்புலன்சில் இப்படி மது கடத்தி செல்வது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
Loading More post
புதுச்சேரி: காங்கிரசில் இருந்து அமைச்சர் நமச்சிவாயம் தற்காலிக நீக்கம்!
“சீனா என்ற வார்த்தையை சொல்லக்கூட தைரியமற்றவர் பிரதமர் மோடி” - ராகுல் காந்தி
ராமர் பாலம் எப்போது, எப்படி உருவானது? - கடலுக்கடியில் ஆய்வு செய்ய மத்திய அரசு ஒப்புதல்!
திமுக ஆட்சி அமைந்ததும் 100 நாட்களில் மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு : மு.க.ஸ்டாலின்
சிக்கிம் எல்லையில் சீன ராணுவம் ஊடுருவல் முயற்சி: இந்திய ராணுவம் முறியடிப்பு
PT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன்? - நேர்காணலில் முதல்வர் விளக்கம்
PT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!