அஸ்வின் சாதனையை முறியடித்த பும்ரா

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா அஸ்வினின் சாதனையை முறியடித்துள்ளார். 


Advertisement

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் இரண்டாவது நாளான நேற்று இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிராவோவை அவுட் ஆக்கினார். இதன்மூலம் ஜஸ்பிரித் பும்ரா டெஸ்ட் போட்டிகளில் தனது 50 ஆவது விக்கெட்டை வீழ்த்தினார். 


Advertisement

இதன்மூலம் அவர் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் படைத்திருந்த சாதனையை முறியடித்துள்ளார். அதாவது அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் 2,597 பந்துகளில் தனது 50 விக்கெட்டை அடைந்தார். ஆனால் பும்ரா 2,464 பந்துகளில் தனது 50 விக்கெட்களை எடுத்துள்ளார். எனவே குறைந்த பந்துகளில் 50 விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனையை பும்ரா படைத்துள்ளார். 

எனினும் குறைந்த போட்டிகளில் 50 விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அஸ்வின் இன்னும் முதலிடத்தில் உள்ளார். இவர் 9 டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்களை எடுத்துள்ளார். பும்ரா தனது 11ஆவது டெஸ்ட் போட்டியில் 50ஆவது விக்கெட்டை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement