அனுமதி பெறாமல் மொபைல் டவர் அமைத்த நிறுவனங்களுக்கு நோட்டீஸ்?

Chennai-High-court-Notice-to-Mobile-tower-setup-companies

தமிழகத்தில் அனுமதியின்றி மொபைல் டவர் அமைத்துள்ள தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, உரிமம் பெறுவதை உறுதி செய்யும்படி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Advertisement

திருப்பூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் குடியிருப்புப் பகுதிகளில் மொபைல் டவர்கள் அமைப்பதை எதிர்த்து அப்பகுதியைச் சேர்ந்த லோகநாதன் உள்பட 11 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு கட்டடங்களில் மொபைல் டவர் அமைக்க அனுமதியளிக்கும் வகையில் 2001-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை பின், தனியார் கட்டடங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டதாகவும், அந்த அரசாணையின்படி, மொபைல் டவர் அமைக்க அந்தந்த மாவட்ட அதிகாரிகளிடம் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


Advertisement

ஆனால், மொபைல் டவர்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான விதிமுறைகள் ஏதும் இதுவரை மத்திய அரசால் அறிவிக்கப்படாத நிலையில், உரிமம் வழங்க மறுக்க முடியாது என மொபைல் ஆபரேட்டர் நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

எந்த விதிகளும் இல்லாத நிலையில், மொபைல் டவர் அமைக்க அனுமதி பெறத் தேவையில்லை எனக் கூற முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், உரிமம் பெறாமல் மொபைல் டவர் அமைத்துள்ள நிறுவனங்களுக்கு ஒரு வாரத்திற்குள் நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்டனர்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement