தினமும் இரண்டு வேளை லட்டு - விவாகரத்து கேட்ட கணவர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சாப்பிட லட்டுகளை மட்டுமே கொடுத்ததால் மனைவியிடமிருந்து கணவர் விவாகரத்து கேட்டுள்ளார். 


Advertisement

உத்தரப்பிரதேச மாநிலம் மீரூட் மாவட்டத்தில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணமாகி 10 வருடங்கள் ஆகியுள்ளது. இவர்களுக்கு மூன்று குழந்தைகளும் உள்ளனர். அண்மையில் கணவருக்கு சிறிய நோய் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கணவர் சற்று அவதிபட்டு வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரது மனைவி ஒரு தாந்திரிகரிடம் சென்று தனது கணவரின் நிலை குறித்து கூறியுள்ளார். 

அதற்கு அந்தத் தாந்திரிகர் மனைவியிடம் கணவருக்கு சாப்பிட காலை மற்றும் இரவு ஆகிய இரு வேளைகளிலும் லட்டுகளை மட்டுமே கொடுக்குமாறு அறிவுரை வழங்கியுள்ளார். இதனையடுத்து கணவருக்கு மனைவி சாப்பிட காலையில் நான்கு லட்டுகளும் இரவில் நான்கு லட்டுகளும் வழங்கியுள்ளார். இதற்கு இடையில் சாப்பிட எதுவுமே கொடுக்கவில்லை. 


Advertisement

இந்நிலையில் தனது மனைவியிடமிருந்து விவாகரத்து தரக் கோரி கணவர் குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இதற்கு காரணம் அவர் சாப்பிட வெறும் லட்டு மட்டுமே தருகிறார் எனக் கூறியுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மனுவை பார்த்த ஆலோசனை வழங்கும் அதிகாரிகளும் மிகவும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். 

loading...

Advertisement

Advertisement

Advertisement