[X] Close

‘என்ன தவறு செய்தார் ப.சிதம்பரம்?’ - கே.எஸ்.அழகிரி கேள்வி

Subscribe
tamilnadu-congress-chief-ks-alagiri-condemn-cbi-officers-went-to-p-chidambaram-house

பிரதமர் மோடியை விமர்சித்ததால் ப.சிதம்பரம் மீது சிபிஐ ஏவி விடப்படுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.


Advertisement

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்ஜாமீன் கோரி முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தொடர்ந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்த நிலையில், ப.சிதம்பரத்தின் டெல்லி இல்லத்திற்கு சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் மாலை 6.30 மணியளவில் சென்றனர். ஆனால், சிதம்பரம் அவரது இல்லத்தில் இல்லை எனக் கூறப்பட்டது. இதனிடையே, தனது வழக்கறிஞர்களில் ஒருவரான அபிஷேக் சிங்வியுடன் ப.சிதம்பரம் ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது. 

       


Advertisement

இந்நிலையில், ப.சிதம்பரம் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் சென்றது கண்டனத்திற்குரியது என்று கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார். அத்துடன், என்ன தவறு செய்தார் ப.சிதம்பரம்? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

அதேபோல், “மற்ற கட்சியினர் எல்லாம் மக்களிடம் நேரடியாக சென்று உறுப்பினர்களை சேர்க்கிறார்கள். ஆனால், பாஜகவினர் மட்டும்தான் அமலாக்கத்துறையை வைத்து உறுப்பினர் சேர்க்கையை நடத்துகின்றனர். பாஜக அரசுக்கு எதிராக பேசக்கூடாது என்பதற்காக விடப்படும் அச்சுறுத்தலை ப.சிதம்பரம் சமாளிப்பார்” என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார். 

       


Advertisement

இதுதொடர்பாக குஷ்பு கூறிய போது, “ப.சிதம்பரம் வீட்டிற்கு சிபிஐ சென்றது பாஜகவின் பயத்தை காட்டுகிறது; இதனை சட்டரீதியாக அவர் சந்திப்பார்” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close