மழை பாதிப்பு : கர்நாடகா, ஒடிஷா, இமாச்சலுக்கு 4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கர்நாடகா, ஒடிஷா, இமாச்சலுக்கு ரூ4,432.10 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. 


Advertisement

இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களிலும் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்ததன் காரணமாக கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கர்நாடகா, ஒடிஷா, இமாச்சல் பிரதேசத்திற்கு ரூ4,432.10 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் குழு கூட்டத்தில் இதற்கான முடிவு செய்யப்பட்டது. 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement