டெபிட் கார்டுகளின் பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வந்து டிஜிட்டல் முறை பண பரிவர்த்தனையை ஊக்குவிக்க போவதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
பண பரிவர்த்தனைக்காக பலரது கையிலும் இருப்பது டெபிட் கார்டுகள். ஏடிஎம் இயந்திரம் மூலம் டெபிட் கார்டு உதவியுடன் தேவைப்படும் நேரத்தில் பணம் எடுத்துக்கொள்ளலாம். இந்நிலையில் எஸ்பிஐ வங்கி டெபிட் கார்டுகளின் பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வரப்போவதாக தெரிவித்துள்ளது.
அதற்கு பதிலாக டிஜிட்டல் முறை பண பரிவர்த்தனையை ஊக்குவிக்க போவதாகவும் குறிப்பிட்டுள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் பேசிய எஸ்பிஐ தலைவர் ராஜ்னிஷ் குமார் டெபிட் கார்டு பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம் என்றும், அதனை நிச்சயம் செய்து முடிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், இந்தியாவில் 90 கோடி டெபிட் கார்டுகள் உள்ளன. அதேபோல் 3 கோடி கிரெடிட் கார்டுகள் உள்ளன. தற்போது எஸ்பிஐ யோனோ மொபைல் செயலி மூலம் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கிறது. அதேபோல் டிஜிட்டல் முறைகளை ஊக்குவித்து டெபிட் கார்டுகளை முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். ஏற்கெனவே 68ஆயிரம் யோனோ கேஷ் மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. அடுத்த 18 மாதங்களில் 10 லட்சம் யோனோ கேஷ் மையங்கள் நிறுவப்படும்.
யோனோ கேஷ் மையங்கள் மூலம் பண பரிவர்த்தனை எளிதாகும். இதன் மூலம் டெபிட் கார்டுகளின் பயன்பாடு பெருமளவில் குறையும். மேலும் இது கிரெடிட் கார்ட் மாதிரியான சேவைகளை வழங்கும் என தெரிவித்துள்ளார். QR கோடு முறையில் பரிவர்த்தனை என்பதும் மிகவும் எளிதான ஒன்று என தெரிவித்துள்ளார்.
Loading More post
“சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு என்பது ஐயத்தை ஏற்படுத்துவதாக உள்ளது” - சீமான்
கொரோனா தடுப்பூசி செலுத்திய ஆறு நாட்களுக்கு பிறகு சுகாதார பணியாளர் மரணம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: முதல் பரிசு வென்றவர் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது உறுதி
“கீழடியில் 7-ஆம் கட்ட அகழாய்வு பிப்ரவரியில் தொடங்கும்” - தமிழக தொல்லியல்துறை
இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பிஸினஸ் ஸ்கூட்டர்; அசத்தும் வசதிகள்
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
வதந்திகளை நம்பாதீர்.. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவரின் அனுபவப் பகிர்வு
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’