[X] Close >

கொள்முதல் விலையை மேலும் உயர்த்துக - தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம்

milk-producers-protest-from-august-27

பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்த வலியுறுத்தி, வரும் 27 ஆம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.


Advertisement

இதுவரை 1 லிட்டர் பசும்பால் 28 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 32 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. எருமைப்பால் கொள்முதல் விலை 35 ரூபாயில் இருந்து 41 ரூபாயாக விலை உயர்த்தி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பசும்பால் கொள்முதல் 4 ரூபாயும், எருமைப்பால் கொள்முதல் விலை 6 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. இன்று முதல் ஆவின் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. 


Advertisement

பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் முகமது அலி பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ஒரு லிட்டர் பசும்பாலின் கொள்முதல் விலை 40 ரூபாய், எருமைப்பாலின் விலை 50 ரூபாய் என நிர்ணயிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தினார். மேலும் பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்த வலியுறுத்தி, வரும் 27 ஆம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close