[X] Close >

‘டிக்டாக்’ மூலம் உத்தரகாண்ட் காவல்துறை விழிப்புணர்வு பிரச்சாரம்

Uttarakhand-Police-joins-TikTok-to-promote-safety

உத்தரகாண்ட் காவல்துறை ‘டிக்டாக்’கணக்கு மூலம் வீடியோக்களை பகிர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.


Advertisement

இளைஞர்களை அதிகம் கவர்ந்த சமூக வலைத்தளங்களில் ஒன்றாக ‘டிக்டாக்’ செயலி இருந்து வருகிறது. இந்தச் செயலியில் இளைஞர்கள் மகிழ்ச்சியாக பாட்டு பாடி, நடனம் ஆடி தங்களின் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். பொழுதுபோக்கு எனக்கூறிகொண்டு பலரும் அபாயகரமான வீட்யோக்களை எடுப்பதால் ‘டிக்டாக்’ பல எதிர்ப்புகளையும் சந்தித்து வருகிறது.

 


Advertisement

இந்நிலையில் உத்தரகாண்ட் போலீசார் டிக் டாக்கில் இணைந்து அதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். உத்தரகாண்ட் போலீசாரின் ‘டிக்டாக்’ கணக்கை தற்போது 14 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர். சாலையில் பெண்கள் பாதுகாப்பாக செல்வது எப்படி போன்ற பெண் பாதுகாப்பு தொடர்பான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும் சுதந்திர தினவிழா கொண்டாட்ட வீடியோவும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள உத்தரகாண்ட் காவல்துறை ஆணையர் அசோக்குமார், மக்களுடன் நேரடியாக இணைந்திருக்க ‘டிக்டாக்’ உதவும் என நம்புகிறோம். ‘டிக்டாக்’ மூலம் பெண் பாதுகாப்பு, சாலை பாதுகாப்பு போன்ற விழிப்புணர்வு வீடியோக்களை பதிவேற்றம் செய்ய உள்ளோம் எனத் தெரிவித்துள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன்பு கேரள போலீசாரும் ‘டிக்டாக்’ கணக்கை தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close