வி.பி.சந்திரசேகர் மறைவு - சச்சின் டெண்டுல்கர் இரங்கல்

Players-set-out-condolence-message-to-VB-chandrasekar-s-death

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகரின் மறைவிற்கு சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் இரங்கலை பதிவு செய்துள்ளனர். 


Advertisement

தமிழக கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய அணியின் முன்னாள் வீரருமான வி.பி. சந்திரசேகர், மயிலாப்பூரில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார். இவரின் மறைவிற்கு இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியம் பிசிசிஐ மற்றும் கிரிக்கெட் வீரர்கள் பலர் தங்களின் இரங்கலை பதிவு செய்துள்ளனர். 


Advertisement

இது தொடர்பாக இந்திய அணி முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், “வி.பி.சந்திரசேகர் இறந்துவிட்டார் என்ற செய்தியை கேட்பதற்கு மிகவும் வருத்தமாகவுள்ளது. அவரது குடுமபத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறேன்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

இதேபோல பிசிசிஐ ட்விட்டர் பக்கத்தில்,“முன்னாள் தொடக்க வீரர் வி.பி.சந்திரசேகரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு இரங்கல்” என பதிவிடப்பட்டுள்ளது.


Advertisement

மேலும் இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா, “சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கட்டமைக்க வி.பி.சந்திரசேகர் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றியதாகவும், தொடக்கம் முதலே தங்களை ஊக்குவித்ததாகவும்” புகழாரம் சூட்டிள்ளார்.

அத்துடன் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “வி.பி.சந்திரசேகரின் மறைவு செய்தி கேட்டு மிகுந்த கவலை அடைவதாகவும், அவரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுவதாகவும்” எனக் கூறியுள்ளார்.

இதேபோல் அனில் கும்ப்ளே, விவிஎஸ் லக்ஷ்மண் உள்ளிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் வி.பி.சந்திரசேகர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement