இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் : இன்று மாலை அறிவிப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் யார் என்பதை இன்று மாலை கபில்தேவ் தலைமையிலான குழு, அறிவிக்க இருக்கிறது.


Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பந்துவீச்சு பயிற்சி யாளர் பரத் அருண், பேட்டிங் பயிற்சி யாளர் சஞ்சய் பாங்கர், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோரின் பதவி காலம் உலகக் கோப்பை தொடருடன் முடிவடைந்தது. இதையடுத்து புதிய பயிற்சியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் கடந்த 30 ஆம் தேதியுடன் முடிந்தது. தலைமை பயிற்சியாளர் தேர்வு இன்று நடக்கிறது.


Advertisement

பயிற்சியாளரை தேர்வு செய்ய கபில்தேவ் தலைமையில் அன்ஷூமன் கெய்க்வாட், சாந்தா ரங்கசாமி ஆகியோரை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தலைமை பயிற்சியாளராக ரவிசாஸ்திரி நீடிக்க வேண்டும் என்று கேப்டன் விராத் கோலி விருப்பம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த பதவிக்கு 2000 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதிலிருந்து, ஆஸ்திரேலியாவின் டாம் மூடி, நியூசிலாந்து முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெஸன், தென்னாப்பிரிக்காவின் கேரி கிர்ஸ்டன், இலங்கையின் ஜெயவர்த்தனே, இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் ராபின் சிங், லால்சந்த் ராஜ்புத் ஆகியோரை கொண்ட இறுதிப்பட்டியல் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவர்களிடம் நேர்காணல் நடத்தப்படும் என்றும் இதில் இருந்து ஒருவர் தேர்வு செய்யப்படுவார் என்றும் கூறப்பட்டிருந்தது.


Advertisement

அதன்படி மும்பையில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரிய அலுவலகத்தில், பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல் இன்று தொடங்கியுள்ளது. காலையில் ராபின் சிங் நேர்காணலுக்குச் சென்றார். அவரை அடுத்து மைக் ஹெசன் சென்றார். மற்றவர்களுடனும் நேர்காணல் நடக்கிறது. பின்னர் இன்று மாலை 7 மணிக்கு கபில்தேவ் தலைமையிலான குழு, புதிய பயிற்சியாளரை தேர்வு செய்து அறிவிக்க இருக்கி றது. இதற்காக 7 மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த முடிவு செய்துள்ளது.

தற்போதைய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியே மீண்டும் அறிவிக்கப்படுவார் என்று கூறப்படு கிறது. 

loading...

Advertisement

Advertisement

Advertisement