‘இந்தியன்2’ புதிய போஸ்டரை வெளியிட்ட ஷங்கர் 

Indian2-striking-Independence-Day-poster-of-the--kamalhaasan-s-film

‘இந்தியன்2’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை அப்பட இயக்குநர் ஷங்கர் வெளியிட்டார்.


Advertisement

கமல் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கிய படம் ‘இந்தியன்’. இப்படம் 1996 ஆம் ஆண்டு வெளியானது. ஊழலை ஒழிப்பது குறித்து இப்படத்தின் கதை அமைந்திருந்தது. ‘இந்தியன்’ முதல் பாகத்தில் 80 வயது முதியவராக கமல்ஹாசன் நடித்திருப்பார். கமல் இருவேடங்களில் நடித்த இப் படம் மூன்று தேசிய விருதுகளை பெற்றது. சிறந்த நடிகருக்கான விருதை கமல் பெற்றார். 


Advertisement

இந்நிலையில் ‘இந்தியன்2’ படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானது. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இப்படம் உருவாகும் என்றும் லைகா நிறுவனம் தயாரிக்கும் என்றும் கூறப்பட்டது. ஆனால் ஒருசில காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டது. சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தற்போது படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

இன்று சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை அடுத்து ‘இந்தியன்2’ படத்தின் புதிய போஸ்டரை அப்படத்தி இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். காக்கி உடை, தலையில் குல்லா என கமல்ஹாசன் வயதான தோற்றத்தில் நிற்பது போல போஸ்டர் அமைந்துள்ளது. சினிமா ரசிகர்கள் பலரும் ‘இந்தியன்2’ படத்தின் புதிய போஸ்டரை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement