’சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கவில்லை’ என்று தெரிவித்துள்ளார், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் விரர் கிறிஸ் கெய்ல்.
இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. டி20 தொடரை கைப்பற்றிய இந்திய அணி, ஒரு நாள் தொடரையும் கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையே நேற்று நடந்த கடைசி மற்றும் மூன்றா வது ஒரு நாள் போட்டியில், கிறிஸ் கெய்ல் அதிரடியாக விளையாடினார். அவர் 41 பந்தில் 72 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்ததும் ஓய்வு பெற்றுவிட்டதாக நினைத்து, இந்திய வீரர்கள் அவருக்கு கைகொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அனைவரும் எழுந்து நின்று அவரை வரவேற்றனர். இதனால் அவர் நேற்றைய போட்டியுடன் ஓய்வு பெற்றுவிட்டார் எனக் கூறப்பட்டது.
ஏற்கனவே உலகக் கோப்பையுடன் அவர் ஓய்வு பெறுவார் என்று கூறப்பட்டது. பின்னர் அவருக்கு வழியனுப்பும் போட்டி ஒன்று நடத்தப்படும் என்றும் இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடர், அவருக்கு கடைசி தொடராக இருக்கும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் கிறிஸ் கெய்ல், நேற்றைய போட்டிக்குப் பின் கூறும்போது, ‘’நான் ஓய்வு பெறுவதாக அறிவிக்கவில்லை. இப்போதும் வெஸ்ட் இண்டீஸ் அணியில்தான் தொடர்கிறேன். அடுத்த அறிவிப்பு வரும்வரை அணியில் தொடர்வேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
The question you've all been asking..has @henrygayle retired from ODI cricket?
Advertisement
Loading More post
“இந்த ஆட்சி எவ்வளவு கேவலமாக இருக்கிறது..” - மேடையில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
குடியரசு தின விழா: சென்னையில் தேசிய கொடியேற்றினார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
டெல்லி டிராக்டர் பேரணி: காவல்துறை விதித்துள்ள முக்கிய நிபந்தனைகள்- விவரம்!
குடியரசுதின விழாவையொட்டி தலைநகர் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு - டெல்லியில் விவசாயிகள் இன்று டிராக்டர் பேரணி
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்