நீலகிரி, கோவை மற்றும் தேனி மாவட்ட மலைப்பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். அத்துடன் கோவை, நீலகிரி மற்றும் தேனி மாவட்ட மலைப்பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், தெற்கு மற்றும் உள் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறினார்.
கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை பெரம்பூரில் 8 செ.மீட்டர் மழையும், வால்பாறையில் 7 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல் பகுதியில் மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால், அடுத்த 24 மணிநேரத்திற்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Loading More post
பிருத்வி ஷா - தவான் அதிரடி! சென்னையை வீழத்தியது டெல்லி கேபிடல்ஸ்!
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஜைக்கா நிதி நிறுவனத்துடன் ஒப்பந்தம் - ஆர்.டி.ஐ மூலம் தகவல்
தியேட்டரில் கூடுதலாக ஒரு காட்சி - தமிழகத்தில் புதிய கொரோனா தடுப்பு விதிமுறைகள்
அதிமுக கடலூர் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் உட்பட 6 பேர் கட்சியில் இருந்து நீக்கம்
தமிழகத்தில் 6 ஆயிரத்தை நெருங்கியது தினசரி கொரோனா பாதிப்பு