நீட் விலக்கு மசோதா தொடர்பாக மத்திய அரசுக்கு 11 கடிதங்கள் அனுப்பியுள்ளோம் : தமிழக அரசு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நீட் தேர்வு விலக்கு மசோதா நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை கேட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக 11 கடிதங்களை மத்திய அரசுக்கு எழுதியுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.


Advertisement

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளித்து சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற நடவடிக்கை எடுக்க கோரி பிரின்ஸ் கஜேந்திரபாபு, பெற்றோர் மாணவர் சங்கம் உள்ளிட்டோர் சார்பில் நான்கு வழக்குகள் தொடரப்பட்டன. 

இந்த வழக்கு விசாரணையின் போது, இரு மசோதாக்களும் திருப்பி அனுப்பப்பட்டு விட்டதாகவும், அதை தமிழக அரசு பெற்றுக் கொண்டு விட்டதாகவும் மத்திய அரசின் உள்துறை செயலாளர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.


Advertisement

இந்த விஷயத்தை சட்டமன்றத்தில் கூட தெரிவிக்காதது ஏன் என விளக்கமளிக்கும் படி தமிழக அரசுக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், இந்த விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு, 2018 ஜூன் 28 நீண்ட விவாதமும் நடத்தப்பட்டதாக தெரிவித்தார். மசோதாக்களை திருப்பி அனுப்பியதற்கான காரணங்களை கேட்டு மத்திய அரசுக்கு 2017 அக்டோபர் 25ம் தேதி முதல் கடந்த மே 5 ம் தேதி வரை 11 கடிதங்கள் தமிழக அரசு அனுப்பி இருப்பதாகவும் தெரிவித்தார்.


Advertisement

எந்த காரணங்களும் தெரிவிக்காமல், மசோதாக்கள் திருப்பி அனுப்பிப்பட்டதால், நடைமுறை நிறைவடையவில்லை என கருத வேண்டியுள்ளது. அதனால் இந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

அப்போது நீதிபதிகள், இந்த வழக்கை பொறுத்தவரை மத்திய அரசு ஒரு உத்தரவை பிறபித்திருப்பதால், ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்கும் படி புதிதாக உத்தரவு பிறபிக்க முடியாது என கூறியதுடன், மசோதாக்களை திருப்பி அனுப்பிய விவகாரத்தில் நடைமுறை பின்பற்றவில்லை என்றால் தனி வழக்காக மட்டுமே தாக்கல் செய்ய முடியும் என அறிவுறுத்தி வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement