மனைவி கொடுத்த புகாரில் பிரபல டிவி நடிகர் கைது 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பிரபல டிவி நடிகர் அபினவ் கோலி தனது மனைவியை கொடுமைபடுத்திய புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். 


Advertisement

பிரபல டிவி நடிகர் அபினவ் கோலி. இவரும் டிவி நடிகையான ஸ்வேதா திவாரியும் கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் பிறந்தார். இது ஸ்வேதா திவாரிக்கு இரண்டாவது திருமணமாகும். ஏற்கெனவே இவர் ராஜா சௌத்ரி என்பவரை மணந்திருந்தார். அப்போது அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்திருந்தது. முதல் கணவரை விவாகரத்து செய்த பின்பு இவர் அபினவ் கோலியை மணந்துள்ளார்.


Advertisement

இந்நிலையில் ஸ்வேதா திவாரி கடந்த ஞாயிற்றுகிழமை இரவு சம்தா நகர் காவல்துறையில் அவரது கணவர் அபினவ் கோலி மீது புகார் அளித்துள்ளார். அதில், அபினவ் தன்னை கொடுமைபடுத்துவதாகவும், தனது முதல் மகளை அபினவ் அடிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இந்தப் புகார் குறித்து விசாரித்து அபினவ் கோலி கைது செய்துள்ளனர். 

loading...

Advertisement

Advertisement

Advertisement