“ஹோட்டலுக்கு உள்ளே கிரிக்கெட் பயிற்சி” : ரிஷாப், குல்தீப் சேட்டை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வெளிப்புறத்தில் மழை பெய்ததால் ஹோட்டல் அறைகளுக்கு வெளியே இருக்கும் இடத்தில் ரிஷாப் பண்ட், குல்தீப் யாதவ் பயிற்சி செய்தனர்.


Advertisement

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளனர். இந்த பயணத்தில் ஏற்கெனவே டி20 தொடர் நடந்து முடிந்துவிட்டது. அதில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வாஷ் அவுட் செய்துள்ளது. இதைத்தொடர்ந்து ஒருநாள் தொடரின் முதல் போட்டி கடந்த வியாழக்கிழமை அன்று நடைபெற்றது. ஆனால் அன்றைய தினம் மழை பொழிவால் போட்டி, 43 ஓவர்களாக குறைக்கப்பட்டது. மழை தொடர்ந்தால் பின்னர் போட்டி நிறுத்தப்பட்டு ரத்தும் செய்யப்பட்டது.

இந்நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று கயானாவில் நடைபெறவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் பயிற்சி எடுத்து வந்தனர். இந்நிலையில் அங்கு மழை பொழிவதால் வீரர்கள் பயிற்சி எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தாங்கள் பயிற்சி செய்வோம் என ஹோட்டலுக்குள்ளேயே இந்திய வீரர்கள் ரிஷாப் பண்ட் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆகியோர் பயிற்சி எடுத்து வருகின்றனர். இதுதொடர்பான வீடியோ ஒன்றையும் ரிஷாப் பண்ட் வெளியிட்டுள்ளார்.     


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement