‘காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தை நிறுத்துங்கள்’ - திமுக அனைத்து கட்சி கூட்டம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தை மத்திய அரசு நிறுத்தி வைக்க வேண்டுமென திமுக தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Advertisement

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ‌ரத்து மற்றும் அம்மாநிலத்தை இரண்டாக பிரிக்கும் மறுசீரமைப்பு சட்டத்தை அண்மையில் மத்திய அரசு இயற்றியது. இதுகுறித்து விவாதிப்பதற்காக திமுக சார்பில் சென்னையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற்றது.


Advertisement

அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தங்கபாலு, ‌மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தை மத்திய அரசு நிறுத்தி வைக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்துக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காஷ்மீருக்கு அனைத்துக்கட்சி தலைவர்கள் அடங்கிய குழுவை மத்திய அரசு அனுப்ப வேண்டும் எனத் தெரிவித்தார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement