கட்சி பதவிக்கு முழுக்கு - காங். முன்னாள் ராஜ்யசபா உறுப்பினர் முடிவு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரான சாண்டியூஸ் குஜூர் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார்.


Advertisement

அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் சாண்டியூஸ் குஜூர். இவர் கடந்த 13 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்துள்ளார். அசாம் மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்வானார்.


Advertisement

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக சாண்டியூஸ் குஜூர் அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளார். தனிப்பட்ட காரணங்களால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அவர் வேறு கட்சிகளில் இணையலாம் என்று தகவல்கள் பரவி வருகின்றன. மோடி தலைமையிலான மத்திய அரசு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பிறகு அதற்கு ஆதரவாக சிலர் காங். கட்சியில் இருந்து விலகி வருவது குறிப்பிடத்தக்கது.

loading...

Advertisement

Advertisement

Advertisement