ஆந்திர முதல்வருடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு - நதிநீர் பிரச்னை குறித்து ஆலோசனை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் சந்தித்தனர்.


Advertisement

தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் குழு இன்று ஆந்திரா சென்றது. அவர்கள் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து நதிநீர் பிரச்னை குறித்து ஆலோசனை நடத்தினர்.

மேலும், சென்னையின் குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா நதி நீரை பெறவும், பாலாற்றில் தடுப்பணை கட்டும் திட்டத்தை நிறுத்தவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த இரண்டு கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் ஜெகன் மோகன் ரெட்டியிடம் அமைச்சர்கள் வழங்கினர்.


Advertisement

          

மனுவை பெற்றுக் கொண்ட முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ஆந்திர மா​நில அமைச்சர்களுடன் ஆலோசித்து செயல்படுவதாக அவர்களுக்கு உறுதி அளித்துள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement