பாகிஸ்தானில், நவாஸ் ஷெரீப் மகள் மரியம் திடீர் கைது

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மகள், மரியம் நவாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.


Advertisement

பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) கட்சியின் துணைத் தலைவரும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகளுமான மரியம் நவாஸ், ஊழல் குற்றச்சாட்டுத் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார். ஊழல் குற்றச்சாட்டில் கோட் லக்பத் சிறை யில் இருக்கும் தனது தந்தை நவாஸ் ஷெரீப்பை சந்திக்க இன்று காலை சென்ற மரியமை, ஊழல் தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர். 


Advertisement

இன்று காலை நேரில் ஆஜராகுமாறு ஊழல் தடுப்பு பிரிவு அவருக்கு சம்மன் அனுப்பி இருந்தது. அவர் ஆஜராகாததால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அவரது கைதுக்கு பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

loading...

Advertisement

Advertisement

Advertisement