கடனை திருப்பிச் செலுத்த தயார்: விஜய் மல்லையா

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வங்கிகளில் தான் பெற்ற கடன் தொகையை 100 சதவிகிதம் திருப்பி செலுத்த தயாராக இருப்பதாக விஜய் மல்லையா மீண்டும் தெரிவித்துள்ளார்.


Advertisement

இந்திய வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று, திருப்பி செலுத்தாத நிலையில்,‌ விஜ‌ய் மல்லையா லண்டன் தப்பிச் சென்றுவிட்டார். இதுதொடர்பா‌ன வழக்கு, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சிறப்பு நீதிமன்றத்தில் நடை பெற்று வருகிறது. மேலும், மல்லையாவை நாடு கடத்தக் கோரும் வழக்கு இங்கிலாந்‌‌தில் நடைபெற்று வ‌ருகிறது. இந்நிலை யில் வங்கிகளில் தான் பெற்ற கடன் தொகையை முழுமையாகத் திருப்பிச் செலுத்த‌ தயாராக இருப்பதாக  மல்லையா மீண்டும் தெரிவித்துள்ளார். 


Advertisement

இதுதொ‌டர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ‌தொழிலில் தோல்வியடைந்தவர்களை தவறாகவோ, குறைத்து‌ எடைபோடவோ கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், பண மோசடி விவகாரத்தில் கவுரவமாக வெளியேறவோ அல்லது சிக்கலுக்கு தீர்வு காண வாய்ப்போ, தர வேண்டும் எனவும் அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


 

loading...

Advertisement

Advertisement

Advertisement