வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பல சாதனைகளை படைக்க காத்திருக்கும் கோலி..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பல சாதனைகளை படைக்கவுள்ளார். 


Advertisement

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் சென்று இந்திய அணி கிரிக்கெட் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரில் 3 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிப் பெற்று டி20 தொடரை கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து நாளை முதல் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஆரம்பமாகவுள்ளது. 


Advertisement

இந்நிலையில் இந்த ஒருநாள் தொடரில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பல சாதனைகளை படைக்கவுள்ளார். முதலில் இந்தத் தொடரில் 19 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைப்பார். இதுவரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விராட் கோலி 1912 ரன்கள் அடித்துள்ளார். 19 ரன்கள் அடிப்பதன் மூலம், பாகிஸ்தானின் ஜாவித் மியான்தத்தின் சாதனையான 1930 ரன்களை முறியடிப்பார். 

அத்துடன் வெஸ்ட் இண்டீஸில் நடக்கும் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர் என்ற சாதனையையும் விராட் கோலி இந்தத் தொடரில் படைக்க வாய்ப்புள்ளது. இதுவரை வெஸ்ட் இண்டீஸில் அந்த அணிக்கு எதிராக 12 போட்டிகளில் விளையாடி உள்ள விராட் கோலி 556 ரன்கள் எடுத்துள்ளார். இவர் இந்தத் தொடரில் 144 ரன்கள் அடித்தால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ராம்நரேஷ் சர்வானின் 700 ரன்கள் என்ற சாதனையை முறியடிப்பார். 


Advertisement

          

அதேபோல வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் போட்டியில் அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தை விராட் கோலி மற்றும் டேஸ்மண்ட் ஹெயின்ஸ் ஆகியோர் பகிர்ந்து கொண்டுள்ளனர். இவர்கள் இருவரும் இதுவரை 2 சதங்கள் அடித்துள்ளனர். இத்தொடரில் விராட் கோலி ஒரு சதம் அடித்தால் இந்தச் சாதனையை தனதாக்கி கொள்வார். இந்திய கிரிக்கெட் அணியின் சாதனை நாயகனான கோலி இந்த சாதனைகளையும் படைப்பார் என்று ரசிகர் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

loading...

Advertisement

Advertisement

Advertisement