“சுற்றுச்சூழல் அனுமதியின்றி 8 வழிச்சாலை திட்டம் தொடங்காது” - மத்திய அரசு

We-don-t-start-8-Way-Road-works-without-environment-approve

சுற்றுச்சூழல் அனுமதி வரும் வரை 8 வழிச்சாலை திட்டத்தை தொடங்கமாட்டோம் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.


Advertisement

8 வழிச்சாலைக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், மத்திய சுற்றுச்சூழல்துறை அனுமதி வரும் வரை 8 வழிச்சாலை திட்டத்தை தொடங்கமாட்டோம் எனத் தெரிவித்துள்ளது. 

மேலும், சாலை அமைப்பது போன்ற எந்த ஒரு கட்டுமான பணிகளையும் மேற்கொள்ள மட்டோம் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது. அத்துடன் உயர்நீதிமன்றம் பிறப்பித்த 8 வழிச்சாலைக்கான தடையை நீக்குமாறு மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால் மத்திய அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது. அத்துடன் வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டியிருப்பதால் வரும் 22ஆம் தேதி மீண்டும் விசாரணை நடைபெறுமென கூறி வழக்கை தள்ளிவைத்துள்ளது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement