“ராஜீவ் பெற்ற வெற்றியைவிட பாஜக மாபெரும் வெற்றி பெரும்” - யஷ்வந்த் சின்ஹா  

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ராஜீவ் காந்தி பெற்ற வெற்றியைவிட பாஜக பெரிய வெற்றியை பெற்றுவிடும் என்று முன்னாள் நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். 


Advertisement

ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் நேற்று மாநிலங்களவையில் நிறைவேறியது. இந்த மசோதா தற்போது மக்களவையில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த மசோதாவின் மூலம் ஜம்மு-காஷ்மீர் பிரிக்கப்பட்டு ஜம்மு-காஷ்மீர், லடாக் இரு யூனியன் பிரதேசங்களாக உருவாக உள்ளது. இந்த மசோதாவிற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். 


Advertisement

இந்நிலையில் முன்னாள் நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா இந்த விவகாரம் குறித்து என்.டி.டிவி தொலைக்காட்சிக்கு கருத்து தெரிவித்துள்ளார். அதில்,“ஜம்மு-காஷ்மீர் பிரிக்கப்பட்டது முழுக்க அரசியல் காரணங்களுக்காக எடுக்கபட்ட முடிவு. இந்த முடிவு அடுத்து வரும் தேர்தல்களை மனதில் வைத்தே எடுக்கப்பட்டது. ஏனென்றால் 2016ஆம் ஆண்டு இதைப் போன்று பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டது. இந்த முடிவு பல பொருளாதார சிக்கல்களை ஏற்படுத்தியது. எனினும் பெரும்பாலான மக்கள் இந்த முடிவை ஏற்றுக் கொண்டனர். 

இந்த விவகாரத்தை போல தான் காஷ்மீர் பிரிப்பு விவகாரமும் பார்க்கப்படும். இந்த முடிவு உண்மையாகவே காஷ்மீர் மக்களுக்காக எடுக்கப்பட்டிருந்தால் அவர்களின் கருத்துகளை மத்திய அரசு கேட்டிருக்கவேண்டும். இம்முடிவின் மூலம் தற்போது நாட்டில் தேர்தல் வைத்தால் 1984அம் ஆண்டு ராஜீவ் காந்தி பெற்ற வெற்றியைவிட பாஜக மாபெரும் வெற்றியை பெரும். அதாவது 1984ஆம் ஆண்டு இந்திரா காந்தி கொல்லப்பட்டதற்குப் பிறகு ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி 400 இடங்களுக்கு மேல் வென்றது. அதைவிட பெரிய வெற்றியை தற்போது பாஜக பெரும்” எனத் தெரிவித்துள்ளார்.  


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement