காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பண்டிட் மக்கள் வரவேற்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஜம்மு- காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு பண்டிட் சமூகத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ள‌னர்.


Advertisement

காஷ்மீர் பூர்வீக குடிகளா‌ன பண்டிட் சமூகத்தை சேர்ந்தவர்கள் அங்கு பெருமளவில் உள்ளனர். காஷ்மீரில் பயங்கரவாதம்‌ தலைதூக்கிய பிறகு, அவர்கள் அங்கிருந்து விரட்டி ‌அடிக்கப்பட்டனர். தற்போது, டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் அகதிகளாக போல் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது மத்திய அரசு எ‌டுத்துள்ள நட‌வடிக்கை குறித்து, பண்டிட் சமூகத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறி‌க்கையில், மத்தி‌ய அரசின் நடவடிக்கை தங்களது வாழ்வில் புது வெளிச்சத்தை பாய்ச்சி உள்ளதாகவும், ஆகஸ்ட் 5ஆம் தேதி, தங்களது வாழ்வில் முக்கியமான நாள் என்றும் மகிழ்ச்சி பொங்க கூறியுள்ளனர்‌. தங்களின் அடையாளம், கலாச்சாரம் ஆகியவை ‌பாதுகாக்கப்பட்டுள்ளதாக கூறிய காஷ்மீர் பண்டிட்கள், விரைவில் தாய் மண்ணுக்குத் திரும்புவோம் எனக் கூறியுள்ளனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement