காணாமல் போன நபர் சடலமாக மீட்பு - போலீசார் தீவிர விசாரணை 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் விவசாய நிலத்தில் இருந்து ஒருவர் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். 


Advertisement

துரைசாமிபுரம் செங்குட்டுவன் தெருவைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர், குடித்துவிட்டு மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்த நிலையில், கடந்த இரண்டாம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பால்‌ராஜின் மனைவி மற்றும் உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். 


Advertisement

இந்நிலையில், இன்று காலை பால்ராஜின் சகோதரர் இசக்கி முத்து கருங்குளம் பகுதியில் தேடி‌ய போது அவரது இருசக்கர வாகனமும், சடலமும் கண்டெடுக்கப்பட்டது. தலையில் அடித்தும், கத்தியால் குத்தப்பட்டும் பால்ராஜ் தாக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. தகவலறிந்து சென்ற டி.எஸ்.பி ரவிச்சந்திரன் மற்றும் ஆய்வாளர்கள், அவரின் இறப்பு குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement