விவசாயி படுகொலை : கொலையாளியை தேடும் பணி தீவிரம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உசிலம்பட்டி அருகே விவசாயி முகம் சிதைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள ஏர்வார்பட்டியைச் சேர்ந்தவர் பால்சாமி. விவசாயியான இவர் தனது தோட்டத்தில் விவசாயம் செய்தது போக, மற்ற நேரங்களில் ஆடுகளை மேய்க்கும் பணியை செய்து வந்ததாக கூறப்படுகிறது. தினமும் ஆடுகளை மேய்த்துவிட்டு, பின்னர் அவைகளின் பாதுகாப்பிற்காக தோட்டதிலேயே இரவு உறங்குவதை பால்சாமி வழக்கமாக கொண்டிருந்துள்ளார். நேற்று இரவு வழக்கம் போல், இரவு தோட்டதிற்கு உறங்க சென்றவர் இன்று காலை பிணமாக கிடந்துள்ளார்.

அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பால்சாமி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அத்துடன் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த உசிலம்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜா தலைமையிலான போலீஸார் சோதனை செய்ததில், தலை பகுதியில் கடுமையாக தாக்கப்பட்டு பால்சாமி படுகொலை செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. 


Advertisement

மேலும் தடயவியல் மற்றும் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை செய்யப்பட்டது. இந்தக் கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், கொலை செய்தது யார் என தேடி வருகின்றனர். உயிரிழந்த விவசாயிக்கு பாப்பம்மாள் என்ற மனைவியும், மூன்று பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement