விராட் கோலி, பாபர் அசாம் சாதனையை முறியடிப்பாரா கே.எல்.ராகுல்?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் பாபர் அசாம் சாதனையை முறியடிக்க கே.எல்.ராகுலுக்கு வாய்ப்புள்ளது.


Advertisement

இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாட சென்றுள்ளது. முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. முதல் 2 டி-20 போட்டிகள், அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் நடக்கிறது. முதல் போட்டி இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. உலகக் கோப்பைக்குப் பிறகு விராத் கோலி தலைமையில் இந்திய அணி பங்கேற்கும் முதல் தொடர் இது.

இந்நிலையில், டி20 போட்டிகளில் அதிவேகமாக ஆயிரம் ரன்கள் அடித்தவர் என்ற சாதனையை படைக்க இந்தத் தொடரில் கே.எல்.ராகுலுக்கு வாய்ப்புள்ளது. டி20 தொடரை பொறுத்தவரை பாபர் அசாம் 26 இன்னிங்சில் 1000 ரன்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார். அதேபோல், 27 இன்னிங்சில் 1000 ரன்கள் அடித்து கோலி இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.


Advertisement

            

தற்போதுவரை கே.எல்.ராகுல் 24 இன்னிங்சில் 879 ரன்கள் எடுத்துள்ளார். ஆயிரம் ரன்களை எட்ட அவருக்கு 121 ரன்கள் தேவை. ஒரு போட்டியில் 121 ரன்கள் அடித்தால் கே.எல்.ராகுல் முதலிடத்தை பிடிப்பார். இரண்டு போட்டிகளில் அடித்தால் பாபர் அசாம் உடன் முதலிடத்தை பகிர்ந்து கொள்வார். 

loading...

Advertisement

Advertisement

Advertisement