வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் பரப்புரை ஓய்ந்தது

election-campaign-ends-in-vellore-lok-sabha-constituency

வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் பரப்புரை மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. 


Advertisement

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, கடந்த இரு வாரங்களாக தலைவர்கள் வேலூரில் அனல் பறக்கும் பரப்புரையில் ஈடுபட்டனர். அதிமுக சார்பில் போட்டியிடும் புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து அமைச்சர்களும், கட்சி நிர்வாகிகளும் பரப்புரை மேற்கொண்டனர். திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் மற்றும் கூட்டணிக் கட்சித்தலைவர்கள் திருமாவளவன், வைகோ ஆகியோர் பரப்புரையில் ஈடுபட்டனர்.

         


Advertisement

இந்நிலையில், தேர்தல் பரப்புரை மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. பரப்புரை நிறைவடைந்ததால் வெளியூரில் இருந்து வந்த நிர்வாகிகள் வேலூரில் இருந்து வெளியேறி வருகின்றனர். வேலூர் மக்களவைத் தொகுதியில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற்று. ஆகஸ்ட் 9 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. 

                

 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement