இளம் பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை: பிறந்த நாளில் சோகம்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தனது பிறந்த நாளில் இளம் பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.


Advertisement

மகாராஷ்ட்ரா மாநிலம் அவுரங்காபாத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண், தனது தோழியின் அழைப்பின் பேரில் கடந்த மாதம் 7 ஆம் தேதி மும்பை சென்றிருந்தார். அங்குள்ள செம்பூரில் தனது தோழியுடன் தங்கியிருந்த அவர், அன்று தனது பிறந்தநாள் என்பதால், கேக் வெட்டிக் கொண்டாடினார். பின்னர் அங்கிருந்து அவுரங்காபாத்துக்குத் திரும்பினார். அப்போது அவரை நான்குபேர் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர். 


Advertisement

பின்னர் அவுரங்காபாத் திரும்பிய அவர் இதுபற்றி யாரிடமும் எதுவும் சொல்லவில்லை. அடிக்கடி அழுதபடியே இருந்துள்ளார். இந்நிலையில், அவரது பிறப்புறுப்பில் கடுமையான வலி காரணமாக, பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகத் தெரிவித்தனர். பின்னர் உண்மையை ஒப்புக் கொண்ட அந்த இளம் பெண், நடந்த சம்பவத்தைத் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரது பெற்றோர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். போலீசார் அடையாளம் தெரியாத அந்த 4 பேரை தேடி வருகின்றனர். 

loading...

Advertisement

Advertisement

Advertisement