மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியல்: பின்னோக்கிச் சென்ற இந்தியா!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் 5 ம் இடத்தில் இருந்த இந்தியா தற்போது 7ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.


Advertisement

உலக வங்கியானது உலகளவில் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி 2018ம் ஆண்டுக்கான பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா பின்னோக்கி சென்றுள்ளது. அதாவது 2017ம் ஆண்டு பட்டியலில் 5ம் இடத்தில் இருந்த இந்தியா 2018 பட்டியலின் படி 7ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.


Advertisement

2018 பட்டியலின் படி பொருளாதாரத்தின் மொத்த மதிப்பாக 20.5 ட்ரில்லியன் டாலர்களை கொண்ட அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 13.6 ட்ரில்லியன் டாலர்களுடன் சீனா இரண்டாவது இடத்திலும், 5 ட்ரில்லியன் டாலர்களுடன் ஜப்பான் 3வது இடத்திலும் உள்ளது. 2.7 ட்ரில்லியன் டாலர்களுடன் இந்தியா 7வது இடத்தில் உள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பொருளாதார வல்லுநர்கள், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிந்து வருவதே பொருளாதார மொத்த மதிப்பு சரிய காரணம் என தெரிவித்துள்ளனர். மேலும் மார்ச் மாதத்தில் முடிவடையும் நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சியானது 7% ஆக குறையும் என மதிப்பிடப்பட்டிருந்தாலும், வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளின் பட்டியலில் இந்தியா முக்கிய இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.


Advertisement

பொருளாதார ஆய்வு நிறுவனம் வெளியிட்ட கணிப்பின்படி, 2019 ஆம் ஆண்டில் இங்கிலாந்தை முந்தி உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வரும் என்றும் 2025 ஆம் ஆண்டில் ஜப்பானை முந்தி மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா இடம்பிடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

loading...

Advertisement

Advertisement

Advertisement