’காஞ்சனா’ இந்தி ரீமேக்கில் வில்லனாகிறார் பாபு ஆண்டனி!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

காஞ்சனா படத்தில் இந்தி ரீமேக்கில் பாபு ஆண்டனி வில்லனாக நடிக்கிறார். 


Advertisement

பூவிழி வாசலிலே, அஞ்சலி, சூரியன், விண்ணைத்தாண்டி வருவாயா, காக்காமுட்டை, அடங்கமறு உட்பட ஏராளமான படங்களில் வில்லனாக நடித்திருப்பவர் பாபு ஆண்டனி. இவர் இப்போது ராகவா லாரன்ஸ் இயக்கும் ’காஞ்சனா’ இந்தி ரீமேக்கில் நடிக்கிறார்.

தமிழில் ஹிட்டான ‘காஞ்சனா’ படம், ’லக்‌ஷ்மி பாம்’ என்ற பெயரில் இந்தியில் ரீமேக் ஆகிறது. அக்‌ஷய்குமார் ஹீரோவாக நடிக்கிறார். கியாரா அத்வானி ஹிரோயின். இந்தியிலும் ராகவா லாரன்ஸ் இயக்குகிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 


Advertisement

இந்நிலையில் இந்தப் படத்தில் பாபு ஆண்டனி வில்லனாக நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது, ’’இந்தியில் ஏற்கனவே பல படங்களில் நடித்திருக்கிறேன். இதில் என்ன கேரக்டரில் நடிக்கிறேன் என்பதை இப்போது சொல்ல இயலாது. ஆனால் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறேன். அக்‌ஷய் குமாருடன் நடிக்க இருப்பதை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இளைஞனாகவும் வயது முதிர்ந்தவனாகவும் நடிக்க இருக்கிறேன். அக்டோபர் மாதம் நான் பங்கேற்கும் காட்சிகளின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்குகிறது’’ என்றார். இதில் அவர் வில்லனாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

loading...

Advertisement

Advertisement

Advertisement