அஜித்தின் அடுத்தப்படத்தின் மூலம் தமிழில் கால்பதிக்கும் ஜான்வி கபூர்?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அஜித் - ஹெச்.வினோத் கூட்டணியில் உருவாகவுள்ள அடுத்தப்படத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது


Advertisement

இந்தி படமான, ‘பிங்க்’  ‘நேர்கொண்ட பார்வை’என்ற தலைப்பில் தமிழில் ரீமேக் ஆகிறது. அமிதாப் நடித்த வழக்கறிஞர் கேரக்டரில் அஜித்குமார் நடித்துள்ளார். வித்யாபாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, டெல்லிகணேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர். இதை ‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களை இயக்கிய ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப்படம் வரும் 8ம் தேதி வெளியாகவுள்ளது. 


Advertisement

இதற்கிடையே அஜித் - ஹெச்.வினோத் கூட்டணியின் அடுத்த படம் குறித்தும் அறிவிப்பை வெளியிட்டார் போனி கபூர். 'ஏகே60 படம் ஆகஸ்ட் இறுதியில் பூஜை உடன் தொடங்குகிறது’ என தெரிவித்திருந்தார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் ஏகே60 படத்தில் ஸ்ரீதேவி - போனி கபூரின் மகளான ஜான்வி கபூர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித் திரைப்படம் மூலம் தமிழில் ஜான்வி அறிமுகமாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வமற்ற தகவல் ஏதும் வெளியாகாத நிலையில் தமிழில் அறிமுகமாகவுள்ள ஜான்விக்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement