திருவாரூரில் வரதட்சணை கொடுமையால் தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட இளம் பெண் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
திருவாரூர் அருகே மருதப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த அருணுக்கும், மைதிலிக்கும் இரண்டரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. அப்போதுமுதல் மைதிலியை வரதட்சணை கேட்டு கணவர் அருண், மாமனார் இளங்கோ, மாமியார் சுபா ஆகியோர் துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
மைதிலி கடந்த மாதம் ஜூலை 26 ஆம் தேதி அதிகாலை, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மைதிலி போராடி வந்தார்.
இதனிடையே வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால், தான் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்தார். அதனடிப்படையில் கணவர் அருண், மாமனார் இளங்கோ ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மைதிலி உயிரிழந்தார்.
Loading More post
சாலமன் பாப்பையா உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்
மறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு
சசிகலா நாளை மறுநாள் விடுதலையாகிறார்: டிடிவி தினகரன்
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
கொரோனா பரவல் அச்சம்: குடியரசுதின கிராம சபைக் கூட்டம் ரத்து
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்