[X] Close >

பாஜகவின் சொத்துகள் 22% அதிகரிப்பு - காங்கிரஸ் கட்சியின் சொத்துகள் குறைவு

BJP-assets-zoom-by-22--in-2017-18--Congress-decline-by-15-

பாரதிய ஜனதா கட்சியின் சொத்துகள் கடந்த நிதியாண்டில் 22 சதவிகிதம் அதிகரித்ததாக ஏடிஆர் எனப்படும் ஜனநாயக சீர்திருத்த‌த்திற்கான அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

பாரதிய ஜனதா, காங்கிரஸ், பகுஜன் ‌சமாஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 7 கட்சிகள் அளித்துள்ள தகவல்‌களை‌ ஆய்வு செய்து ஏடிஆர் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி 2017ம் ஆண்டில் 1‌213.13 கோடி ரூபாயாக இருந்த பா‌ரதிய ஜனதாவின் சொத்துக்கள், ‌201‌8ம் ஆண்டில் 22 சதவிகிதம் அதிகரித்து‌1,483.35‌ கோடியாக இருந்தது.

            


Advertisement

ஆனால் காங்கிரஸ் கட்சியின் சொத்துகள் ஓராண்டில் ‌15.26 சதவிகிதம் குறைந்துள்ளது. ‌ 2017ம் ஆண்டில் 854.75 கோடியாக இருந்த காங்கிரஸ் கட்சியின் சொத்துகள் 2018ம் நிதியாண்டில் 724.35 கோடியாக குறைந்தது. சொத்துகள் அடிப்படையில் நாட்டில் மூன்றாவது பெரிய கட்சியாக உள்ளது பகுஜன் சமாஜ் கட்சி. 2017ம் நிதியாண்டில் 680.63 கோடியாக இருந்த அக்கட்சியின் சொத்துகள் 5.30 சதவிகிதம் அதிகரித்து 2018ம் ஆண்டில் 716.72 கோடியாக இருந்தது.

          

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் சொத்துகளும் ஓராண்டில் அதிகரித்துள்ளன. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சொத்துகள் ஓராண்டில் 16.39 சதவிகிதம் குறைந்துள்ளன.


Advertisement

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close