இஸ்லாமிய அமைப்புகளுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்திய மண்டபத்திற்கு சீல்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஆம்பூரில் இஸ்லாமிய அமைப்புகளுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்திய மண்டபத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.


Advertisement

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் இஸ்லாமிய அமைப்பினருடன் திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன், வேட்பாளர் கதிர் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டம் நடந்து முடிந்த பின்னர் தேர்தல் படையினர் அங்கு வந்தனர். அத்துடன் தேர்தல் நடக்கும் தொகுதியில் அனுமதியின்றி அரசியல் கூட்டம் நடத்தியதாக தனியார் மண்டபத்திற்கு வட்டாட்சியர் சீல் வைத்தார். முன்னதாக, கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் இஸ்லாமியர்களுக்கு திமுக தான் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கும், எனவே திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்தக் கூட்டத்தில் ஆம்பூரின் மசூதிகளை சேர்ந்த இஸ்லாமிய தலைவர்கள் பங்கேற்றனர். 

loading...

Advertisement

Advertisement

Advertisement