வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை : தென்கொரியா தகவல்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. 


Advertisement

வடகொரியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் இருக்கும் வான்சேன் பகுதியில் இருந்து இரண்டு ஏவுகணைகளை வடகொரியா சோதித்துள்ளது. 30 கிலோமீட்டர் உயரத்தில் 115 மைல்களுக்கு பயணித்த ஏவுகணை ஜப்பான் கடல் பகுதியில் விழுந்தது. இதுவரை வடகொரியா சோதித்த ஏவுகணைகளில் இது புதிய வகையான ஏவுகணை என்று தென்கொரியா தெரிவித்துள்ளது. 

ஒரு வாரத்தில் 2வது முறையாக வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. தென்கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட இருக்கும் சூழலில் வடகொரியா ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது. முன்னதாக ஏவுகணைகளை சோதிக்கும் விவகாரத்தில், வடகொரியா மற்றும் அமெரிக்கா இடையே இருந்து, இருதரப்பு பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement