வரி ஏய்ப்பு செய்ததாக பொள்ளாச்சியில் பிரபல நகைக்கடைகள், ரியல் எஸ்டேட் அதிபர் வீடு உள்ளிட்ட பல இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 8 மணி நேரத்திற்கும் அதிகமாக சோதனை நடத்தினர்.
பொள்ளாச்சி கடைவீதியில் செயல்படும் சின்ன அண்ணன் ஜுவல்லரி மற்றும் கணபதி ஜூவல் சிட்டி உள்ளிட்ட நகை கடைகள் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் போது கடை ஊழியர்களை வெளியே விடாமலும், வாடிக்கையாளர்களை உள்ளே அனுமதிக்காமலும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். நேற்று காலை தொடங்கி மாலை வரை தொடர்ந்து நடைபெற்ற சோதனையில் பல ஆவணங்களை கைப்பற்றி உள்ளதாக முதற்கட்டமாக தகவல் வெளியாகி உள்ளது.
அதேபோல் பொள்ளாச்சி கோட்டாம்பட்டி சுப்பையன் நகரை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஈஸ்வரமூர்த்தி என்பவரது வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் காலை முதலே சோதனை மேற்கொண்டனர். கல்குவாரி, பல்வேறு வணிக நிறுவனங்கள் வைத்திருக்கும் ஈஸ்வரமூர்த்தி, பொள்ளாச்சி அடுத்த அம்பராம்பாளையம் பகுதியில் ஆயில் மில் நடத்தி வரும் சசிகுமார் என்பவரது வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தினர்.
மேலும் பொள்ளாச்சி பகுதியில் இதே போல பல இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பொள்ளாச்சியில் ஒரே நாளில் பல இடங்களில் 8 மணி நேரத்திற்கு மேல் வருமானவரித்துறையினர் சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது.
Loading More post
ஜெயலலிதாவுக்கு தீர்க்க முடியாத நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்: ஓபிஎஸ் - வீடியோ
சசிகலா விடுதலையை கொண்டாடவே ஜெயலலிதா நினைவிடம் திறப்பு - டிடிவி தினகரன்
விவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா? - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு!
சீர்காழி: 2 பேரை கொன்றுவிட்டு நகை கொள்ளை - கொள்ளையரை என்கவுன்ட்டர் செய்த போலீஸ்!
ஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி!
முல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது? - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்!
டெல்லி டிராக்டர் பேரணிக்கு ஆதரவு: தமிழகத்தின் பல இடங்களில் விவசாயிகள் பேரணி!
PT Exclusive: "ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது!" - ராகுல் காந்தி நேர்காணல்
சசிகலா பதவியேற்புக்கு எதிர்ப்பு.... பதவியை ராஜினாமா செய்த நிர்வாகிகள்..!
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி