பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி, இந்திய பெண் ஒருவரை திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பலர் இந்திய பெண்களை திருமணம் செய்துள்ளனர். சோயிப் மாலிக் பிரபல இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவை திருமணம் செய்து கொண்டார். அதேபோல், முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் ஜாஹிர் அப்பாஸ் மற்றும் மொசின் ஹாசன் கான் ஆகியோரும் இந்திய பெண்களை திருமணம் முடித்து இருந்தனர்.
அந்த வரிசையில், மற்றொரு பாகிஸ்தான் வீரர் இந்திய பெண்ணை திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி, ஷமியா அர்ஸு என்ற இந்திய பெண்ணை திருமணம் செய்யவுள்ளார். ஷமியா ஹரியானாவின் மேவாட் மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஆகஸ்ட் 20 ஆம் தேதி இந்த திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பி.டெக் ஏரோனேடிகல்ஸ் படித்த ஷமியா ஜெட் ஏர்வேஸில் பணிபுரிந்தார். தற்போது, எமிரேட் ஏர்லைன்ஸ்-ல் இன்ஞினியராக பணியாற்றி வருகிறார்.
இருப்பினும் இதுகுறித்து ஹசன் அலி தன்னுடைய ட்விட்டரில், “என்னுடைய திருமணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை தெளிவுபடுத்துகிறேன். இரு வீட்டினரும் இன்னும் சந்திக்கவில்லை. விரைவில் அந்த செய்தியை எல்லோருக்கும் தெரிவிப்பேன்” என குறிப்பிட்டுள்ளார்.
Loading More post
"வாங்க மோடி... வணக்கங்க மோடி.." கொங்கு தமிழில் பாஜகவினரின் வரவேற்பு பாடல்
"நாட்டின் மிகப்பெரிய கலவரக்காரர் மோடி"-மம்தா பானர்ஜி ஆவேசம்
கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து வந்தால் 7 நாள் தனிமை - தமிழக அரசு
ராக்கெட் வேகத்தில் உயரும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை: ஒரே மாதத்தில் ரூ.100 உயர்வு!
சென்னை: 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!