விஜய்-யின் ’கத்தி’ ரீமேக்கை இயக்குகிறார் ’மிஷன் மங்கள்’ டைரக்டர்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

’கத்தி’ படத்தின் இந்தி ரீமேக்கில் அக்‌ஷய் குமார் நடிப்பது உறுதியாகியுள்ளது. ’மிஷன் மங்கள்’ படத்தின் இயக்குனர், இந்தப் படத்தை இயக்குகிறார்.


Advertisement

விஜய், சமந்தா நடிப்பில் 2014 ஆம் ஆண்டு வெளியான படம், ’கத்தி’. லைக்கா நிறுவனம் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருந்த இந்தப்படம் ஹிட்டானது. இதையடுத்து இதன் இந்தி ரீமேக்கில் அக்‌ஷய் குமார் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. பின்னர் அது உறுதிப்படுத்தப்பட்டது. ஆனால், இந்தப் படத்தை யார் இயக்க போகிறார்கள் என்பது தெரியாமல் இருந்தது.


Advertisement

இந்நிலையில் அக்‌ஷய் குமார், வித்யா பாலன், சோனாக்‌ஷி, டாப்ஸி, நித்யா மேனன் நடித்துள்ள ’மிஷன் மங்கள்’ படம், அடுத்த மாதம் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இது மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதை மையமாக வைத்து உருவாகியுள்ளது. உண்மை சம்பவங்களை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படத்தை ஜெகன் சக்தி இயக்கியுள்ளார். இவர், சீனிகம், பா, இங்கிலீஷ் விங்கிலீஷ், துப்பாக்கி, ஹாலிடே ஆகிய படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர். 

’மிஷன் மங்கள்’ படத்துக்குப் பிறகு ’கத்தி’ படத்தின் இந்தி ரீமேக்கை, ஜெகன் சக்தி இயக்குகிறார். Ikka என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் அக்‌ஷய் குமார் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். ’’எனது இரண்டாவது படம், ஆக்‌ஷனை மையப்படுத்தி இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதன்படி ’கத்தி’ ரீமேக்கை இயக்குகிறேன். இந்தப் படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்குகிறது’’ என்று தெரிவித்துள்ளார் ஜெகன் சக்தி.


Advertisement
loading...
Related Tags : Jagan ShaktiAR MurgadossKaththiMission Mangal

Advertisement

Advertisement

Advertisement