உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் முடிவு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சபாநாயகர் தகுதி நீக்க முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் நாளை வழக்கு தொடரவுள்ளனர். 


Advertisement

கர்நாடகாவில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் - மஜத அரசு தோல்வி அடைந்ததை அடுத்து, குமாரசாமி தன்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து, பாஜக ஆட்சி அமைக்க உரிமை கோரியது. ஆளுநர் அழைப்பை ஏற்று எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். இதனையடுத்து இன்று 14 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி 11 காங்கிரஸ் எம்எல்ஏக்களும், 3 மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 


Advertisement

இந்நிலையில் சபாநாயகரின் தகுதி நீக்க முடிவுக்கு எதிராக கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் நாளை உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவுள்ளனர். இது தொடர்பாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ விஷ்வநாத்,“சபாநாயகர் ரமேஷ் குமாரின் முடிவு விதிமுறைகளுக்கு புறம்பானது. எனவே நாங்கள் இந்த முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யவுள்ளோம்” எனத் தெரிவித்தார். 

 இதற்கிடையே கர்நாடகாவில் இன்று பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம் ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கர்நாடக பாஜக எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடியூரப்பா, “பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் நாளைய சட்டப்பேரவையின் நிகழ்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. முதலில் நான் பெரும்பான்மையை நிரூபிப்பேன். அதன்பிறகு நிதி தொடர்பான மசோதாவை தாக்கல் செய்ய உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார். 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement