கோவையில் வெளிநாடு விமான சேவை விரிவாக்கம் - மத்திய அமைச்சகம் உறுதி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கோவையிலிருந்து வெளிநாடுகளுக்கு விமானசேவை அதிகரிக்கப்படும் என மத்திய விமான போக்குவரத்து‌ அமைச்சகம் உறுதியளித்துள்ளது. 


Advertisement

கோவையிலிருந்து துபாய், கோலாலம்பூர், பாங்காங் உள்ளிட்ட இடங்களுக்கு விமான போக்குவரத்து வசதி ஏற்படுத்த வேண்டும் என மக்களவையில் எம்.பி. ஆ.ராசா வலியுறுத்தியிருந்தார். இதுதொடர்பாக விமான போக்குவரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியிடம் ஆ.ராசா கோரிக்கை மனுவும் அளித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள மத்திய அமைச்சர், தற்போதுள்ள ‌நடைமுறையின் படி உடனடியாக வெளிநாட்டு விமான சேவைகளை கோ‌வையில் தொடங்க இயலாது என தெரிவித்துள்ளார். 

இருப்பினும், வெளிநாடுகளுக்கு விமான சேவையை அதிகரிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள கடந்த ‌10ஆம் தேதி நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இதனால், கோவையில் இருந்து வெளிநாடுகளுக்கு விரைவில் விமான சேவை தொடங்க வழிவகை செய்யப்படும் என்றும் மத்திய அமைச்சர் கடிதம் மூலம் உறுதியளித்துள்ளார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement