[X] Close

6 வயதில் ரூ.55 கோடிக்கு சொத்து வாங்கிய யூ டியூப் பிரபலம்!

Subscribe
This-6-Year-Old-Youtuber-Just-Bought-A-House-Worth----55-Crore

6 வயது யூ டியூப் பிரபலமான போரம் இந்திய மதிப்பில் ரூ.55 கோடியில் சொத்து வாங்கியுள்ளார்.


Advertisement

தென் கொரியாவைச் சேர்ந்த 6 வயதான யூ டியூப் பிரபலம் போரம். இவர் இரண்டு யூ டியூப் சேனல்களை நடத்தி வருகிறார். உலக அளவில் உள்ள  குழந்தைகள் விளையாடும் பொம்மைகள் குறித்து ரிவியூவ் செய்கிறது போராமின் யூ டியூப் சேனல். மற்றொன்றான போரம் டியூப் விலாக்கும் மிகவும் புகழ்பெற்றது.


Advertisement

ஆக மொத்தமாக 31 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களைக் கொண்டு யூ டியூப்பில் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். இந்நிலையில் போரமின் குடும்பத்தினர் தென் கொரியாவில் உள்ள சியோல் பகுதியில் இந்திய மதிப்பில் ரூ.55 கோடிக்கு 5 மாடிகள் கொண்ட கட்டடத்தை விலைக்கு வாங்கி உள்ளனர்.

யூ டியூப் மூலம் அவ்வளவு வருமானமா என்று வாய் பிளக்கும் நபர்களுக்கு பதில் அளித்துள்ள யூ டியூப் நிபுணர்கள், போரமின் யூ டியூப் சேனல்களுக்கு மொத்தம் 31 மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ் இருப்பதால் அவருடைய சேனல் மாதத்துக்கு 3.1 மில்லியன் டாலர்கள் அதாவது ரூ.21 கோடி சம்பாதிப்பதாக விளக்கம் அளித்துள்ளனர்.


Advertisement
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close