6 வயது யூ டியூப் பிரபலமான போரம் இந்திய மதிப்பில் ரூ.55 கோடியில் சொத்து வாங்கியுள்ளார்.
தென் கொரியாவைச் சேர்ந்த 6 வயதான யூ டியூப் பிரபலம் போரம். இவர் இரண்டு யூ டியூப் சேனல்களை நடத்தி வருகிறார். உலக அளவில் உள்ள குழந்தைகள் விளையாடும் பொம்மைகள் குறித்து ரிவியூவ் செய்கிறது போராமின் யூ டியூப் சேனல். மற்றொன்றான போரம் டியூப் விலாக்கும் மிகவும் புகழ்பெற்றது.
ஆக மொத்தமாக 31 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களைக் கொண்டு யூ டியூப்பில் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். இந்நிலையில் போரமின் குடும்பத்தினர் தென் கொரியாவில் உள்ள சியோல் பகுதியில் இந்திய மதிப்பில் ரூ.55 கோடிக்கு 5 மாடிகள் கொண்ட கட்டடத்தை விலைக்கு வாங்கி உள்ளனர்.
யூ டியூப் மூலம் அவ்வளவு வருமானமா என்று வாய் பிளக்கும் நபர்களுக்கு பதில் அளித்துள்ள யூ டியூப் நிபுணர்கள், போரமின் யூ டியூப் சேனல்களுக்கு மொத்தம் 31 மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ் இருப்பதால் அவருடைய சேனல் மாதத்துக்கு 3.1 மில்லியன் டாலர்கள் அதாவது ரூ.21 கோடி சம்பாதிப்பதாக விளக்கம் அளித்துள்ளனர்.
Loading More post
அசாதுதீன் ஒவைசியின் கட்சிக்கு தமிழகத்தில் பட்டம் சின்னம் ஒதுக்கீடு!
வேட்பாளர் தேர்வில் மிரட்டல்.. நந்திகிராம் தொகுதியில் போட்டி - அசத்தும் மம்தா பேனர்ஜி!
ரமலான் தினத்தன்று நடைபெற இருந்த சிபிஎஸ்இ தேர்வு தேதியில் மாற்றம்
பவுண்டரிகள் விளாசல் - அதிரடியாக சதத்தை நோக்கி செல்லும் ரிஷப் பண்ட்!
“எண்ணிக்கை குறைவு என்பதை விட நம்மை நடத்தும் விதம்” - கண்ணீர் விட்ட கே.எஸ்.அழகிரி!